பல்கலைக்கழகப்பட்டம் பெறவேண்டும் எனும் கனவு உங்களுக்கு, வீட்டிலிருந்தே படித்துப்பட்டதாரி ஆக வேண்டும் என்ற உங்கள் இலட்சியத்திற்கு அரிய கல்விவாய்ப்பை வழங்குகிறது இணையப்பல்கலைக் கழகம்! ஐரோப்பா வாழ் தமிழர்களுக்கோர் நற்செய்தி! தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் தொடர்பு நிலையம்: அன்னை கலைக் கழகம்- நடராசா கண்ணப்பு, லண்டன்

Jacob Moreno Psychodrama

======================================= =========================================

Wednesday, 29 February 2012

மறு இயக்குனர்களுடன்:

யாருக்காக அழுதான் '77

 தையல் முத்து மாளிகை ஸ்டான்லி வீதி- எனது பிரத்தியேகக் கல்வி நிலையம் அங்கே செயல் பட்டுக்கொண்டிருந்தது, அதன் ஒரு பகுதியில் பெரியமாடி வீடுஅமைக்கப்பட்டு இந்த நாடகம் பெரிய ஒத்திகையோடு தொடங்கப்பட்டது, ஆனால் பின்னர் மேடையேற்றப்படவில்லை.

கதை
ஜெயகாந்தன்
இயக்கம்
நிர்மலா புகழ்
அருமைநாயகம்.

நல்லை தந்த காவலன் '76/77

இரண்டு இடங்களில் (யாழ்ப்பானம் ஆனைக்கோட்டை, சாவகச்சேரி) மேடையேற்றப்பட்டது.
இதில் அமைச்சனாய் நடித்தேன். 
நாடகக் காவலர் தர்மா மாஸ்டர்,கௌரி, பல்கலைமணி தம்பிராசா (அதிபர் ஆனைக்கோட்டை அமெரிக்கன் மெதடிஸ்ட் மிஷன் பாடசாலை)நடித்தனர்.


இயக்கம்
இயக்குனர் மணி நற்குணசேகரம்

===================================================
தண்டனை '75/'76

நாடகக் காவலர் தர்மா மாஸ்டர், ஜெயந்தி, ரஞ்சித் மாஸ்டர், றெமிசியஸ்(நாவாந்துறை), பல்கலைமணி தம்பிராசா (அதிபர் ஆனைக்கோட்டை அமெரிக்கன் மெதடிஸ்ட் மிஷன் பாடசாலை), புலேந்திரன் போன்றோர் நடித்தனர்.

இந்த நாடகம் மானிப்பாய் மெமோரியல் கல்லூரியில் மேடையேற்றப்பட்டது.

கதை
நவாலியூர் செல்லதுரை
இயக்கம்
நாடகக் காவலர் தர்மா மாஸ்டர் 
=====================================================
வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் '78-'79
இதில் அமைச்சனாய் நடித்தேன். 
இயக்குனர் 
அருந்ததி(அருள் மாஸ்ரர்)
=================================================
நக்கீரன் '70

இதில் என்னோடு சிவனாய் நடித்தவர் சிவகுமார் .
இயக்குனர்
திரு விமலேஷ்வரன்
ஆசிரியர்(ஸ்கந்தவரோதயா கல்லூரி)
=================================================
மனு நீதி கண்ட சோழன் '70
இதில் சாந்தகுமார்(கனடா தற்போது) முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.
நான் அமைச்சனாய் நடித்தேன்.
இயக்குனர்
திரு விமலேஷ்வரன்
ஆசிரியர்(ஸ்கந்தவரோதயா கல்லூரி) 
================================================
இதயக்கோயில் '67
இதில் பெண்வேடம்- அருளானந்தம் எனது சக பள்ளித்தோழன் வீட்டிலுருந்து பெண் ஒப்பனையோடு தெருவைக்கடந்து சென்றதுநினைவிலுருக்கிறது.

இந்த நாடகம் நீராவியடி (யாழ்பாணம் )பிள்ளையார் கோயிலுக்கு முன்னாலுள்ள தீர்த்தக்கேணிக்கு  அருகாமையில் உள்ள முன்றலில் மேடையேற்றப்பட்டது.

கதை இயக்கம்
அருளானந்தம் (நீர்வேலி)
பரமேஷ்வாராக்கல்லூரி சக மாணவன்.
===============================================
குரங்கை வென்ற தொப்பிவியாபாரி '63

இதில் தொப்பிக்காரனாய் நடித்தேன்.
இதுவே நினைவில் இருக்கும் முதலாவது அரங்கம். 

* இந்த அரங்கம் பற்றி - மெய்ஞான/ விஞ் ஞான பார்வை  - அரங்கம் காட்டும் அதிசய வாழ்வு எனும் தொடரில் எழுதியிள்ளேன்.

இயக்கம்
தலமை ஆசிரியர் விநாசித்தம்பி
குருநாதஸ்வாமி வித்தியாசாலை-யாழ்பாணம்/ஆணைப்பந்தியடி
 =================================================


No comments:

Post a Comment